தீரன் சின்னமலையின் 267 வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை.
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267 வது பிறந்த நாளையொட்டி திருச்சியில் அவரது உருவச்சிலைக்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை.
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267 வது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள திருச்சி அரசு போக்குவரத்து கழக வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் முழு உருவ சிலைக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர மேயர் அன்பழகன், கொங்குநாடு மக்கள் கட்சி மாநில தலைவர் தேவராஜ், திருச்சி மாவட்ட செயலாளர் சேகர், மற்றும் நிர்வாகிகள் கே.கே.பரமசிவம், குமார் கவுண்டர், முத்துசாமி, தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.