திருச்சியில் லோக்தந்திரிக் ஜனதா தளத்தின் மாநில செயற்குழு கூட்டம்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மஹாலில் லோக்தந்திரிக் ஜனதா தளத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைமை பொது செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது:
தமிழகத்தில் கடந்த 4 வருடங்களாக மதுவிலக்கு பிரச்சாரம், விலைவாசி உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் என மக்கள் பிரச்சினைக்காக போராடி வரும் மூத்த தலைவர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
2024-ம் ஆண்டு வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து மிக வலிமையான எதிர்க்கட்சி அணியை உருவாக்குவதற்கும் ஜனதா தளத்திலிருந்து புரிந்த அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து வலிமையான ஜனதா தளத்தை உருவாக்க ஜனதா தளத்தின் தேசிய தலைவர் சரத் யாதவ் முதல் கட்டமாக ஜனதா தளம் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைத்துள்ளார் இதனை தமிழக லோக்தந்திரிக் ஜனதா தளம் பின்பற்ற உள்ளது.
5 மாநில தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி உள்ளது. இதனை உடனடியாக குறைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் வேலை வாய்ப்புகளை இழந்து மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் சமையல் எரிவாயு விலையும் ஆயிரம் ரூபாயாக உயர்ந்து உள்ளது, இதனையும் உடனடியாக குறைக்க வேண்டும்.
தமிழக அரசு சொத்து வரியை படிப்படியாக உயர்த்தி இருக்கவேண்டும். ஒரே கட்டமாக பல மடங்கு உயர்த்தி இருப்பதால் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்,இதனை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒரு மாணவர் நிறைவேற்றியாதை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.
இதேபோன்று தமிழக அரசால் அனுப்பப்பட்ட18 மசோதாக்களை கிடப்பில் போட்டு உள்ளார்.ஆளுநரின் இந்த போக்கினை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தின்படி இந்தியாவில் வாழும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு மத்திய அரசு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் நீர் நிலைகள். அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து இருப்பவர்களை வெளியேற்றி அவர்கள் மீது குற்ற வழக்குகளை பதிவு செய்து தண்டிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் ராஜகோபால்,
மற்றும் சம்பத், கோவிந்தராஜ் வையாபுரி, கே.சி.ஆறுமுகம்
மாவட்ட தலைவர் அறிவழகன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.