திருச்சியில் தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் மற்றும் மெடிக்கல் லேபாரட்டரீஸ் அசோசியேஷன் கலந்தாய்வுக் கூட்டம்.
மருந்து கடைகளில்
ஆய்வக பரிசோதனை மேற்கொள்வதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மெடிக்கல் லேபரட்டரிஸ் அசோஷியேஷன் மற்றும் மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்க கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம், தமிழ்நாடு மெடிக்கல் லேபரட்டரீஸ் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்க்கு தமிழ்நாடு அரசு சங்க மாநில தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். சங்க நிறுவனத் தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அரசு சங்கத்தின் மாநிலச் செயலாளர் மரியதாஸ், நாகா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் செயலாளர் டாக்டர் தமிழ்ச்செல்வி சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் மாநில அமைப்பாளரும், திருச்சி மாவட்ட தலைவருமான மார்ட்டின்,மாநிலச் செயலாளர் விஜயகுமார், மாநில பொருளாளர் மதனகோபால்,சங்க ஆலோசகர் ஆனந்த் திவாகர் ,மாவட்டச் செயலாளர் லோகநாதன்,
மாவட்ட துணைத்தலைவர் உள்பட ஹென்றி புஷ்பராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் தமிழ்நாடு அரசு சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ரவி நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில் காலிப்பணியிடங்களுக்கு எம்.ஆர்.பி மூலம் வெயிட்டேஜ் முறையை தவிர்த்து எழுத்துத் தேர்வு மூலம் லேப் டெக்னீசியன் நிலை- 2 பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
மருந்து கடைகளில் ஆய்வக பரிசோதனை மேற்கொள்வதை தடை செய்ய வேண்டும்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்களுக்கு கவுன்சில் இருப்பதுபோன்று ஆய்வக நுட்பனர்களுக்கும் கவுன்சில் அமைத்து தரவேண்டும் .
ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களில் தனியார் ஆய்வு கூடங்களுக்கு பின்பற்றப்பட்ட ஏ.பி.சி என்ற தகுதி அடிப்படையில்
சி.இ.ஏ சான்றிதழ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.