திருவரங்கத்தில்
அதிமுக சார்பில்
நீர் மோர் பந்தல்.
மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி திறந்து வைத்தார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவரங்கத்தில் அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடந்தது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர் ,தர்பூசணி, நீர் மோர் ஆகியவற்றை வழங்கினார் .
முன்னாள் அமைச்சர் வளர்மதி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பொன்.செல்வராஜ்,சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி , சுந்தர்ராஜன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார் ,
கோப்பு நடராஜ், முத்துக்கருப்பன்,
முன்னாள் பாக செயலாளர் வி.என்.ஆர்.செல்வம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.