திருச்சி கல்லுக்குழி அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க கூடாது. கலெக்டரிடம் பாமகவினர் மனு.
The new Tasmac store near the Trichy quarry should not be opened. Bamakavinar petition to the Collector.
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள
டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்.
திருச்சி மாவட்ட கலெக்டரிடம் பாமகவினர் மனு.

திருச்சி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் திலீப் குமார் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது;- திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு சட்டமன்ற தொகுதி சுப்பிரமணியபுரம் டோல்கேட் செல்லும் வழியில் கல்லுக்குழி மேம்பாலம் அருகில் சர்வீஸ் சாலை உள்ளது. அந்த சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், தரை கடைகள், பள்ளிவாசல், கோவில்கள் அதிகமாக இருந்து வருகிறது.
இதனால் அந்த கோயில் மக்கள் அதிகமாக புழங்கும் இடமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது இதனால் குடிமகன்களின் தொல்லை அதிகமாக இருப்பதால் அந்த பகுதியில் பெண்கள் குழந்தைகள் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது. அதே பகுதியில் மீண்டும் ஒரு டாஸ்மாக் கடையை திறப்பதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் வேலை பார்த்து வருகிறார்கள் ஆகவே இந்த செயலை உடனடியாக நிறுத்தக் கோரி எங்கள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே எங்கள் கட்சி சார்பாக அந்த கடையை போராட்டம் நடத்தி மூடினோம். இந்த நிலையில் மீண்டும் அதே கடையை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது ஆகவே திருச்சி மாவட்ட கலெக்டர் இந்த செயலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லுக்குழி மேம்பாலம் அருகே புதிய டாஸ்மாக் கடையை திறக்க கூடாது இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.