திருச்சி கோயில்களில் தொடரும் திருட்டுகள். கண்டுகொள்ளாத இந்து சமய அறநிலையத்துறை.வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி
இந்து திருக்கோயில் மீட்பு இயக்க தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருக்கோயில்களில் தொடரும் மர்ம திருட்டுகள்.
கண்டுகொள்ளாத காவல்துறை மற்றும் அறநிலைத்துறை.
திருச்சி, புத்தூரில் ( அரசு பொது மருத்துவமனை எதிரில்) மிகவும் பழமை வாய்ந்த அம்மன் திருத்தலம் உள்ளது.
மிகவும் புகழ்பெற்ற, அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அம்மனின் முலாம் பூசப்பட்ட கை செட்டுகள் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.
அம்மனின் முலாம் பூசப்பட்ட கை செட் மிகவும் பழமை வாய்ந்தது .
இது மர்மமான முறையில் மாயமாகியுள்ளது என்று பக்தர்கள் தெரிவிக்கின்றார்கள்.
மர்மமான முறையில் காணாமல் போன முலாம் பூசப்பட்ட கை செட் குறித்து அப்போது பணியிலிருந்த செயல் அலுவலர், அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு, அல்லது காவல் துறைக்கு எந்தவித தகவலும் கொடுக்காமல் , அவசர அவசரமாக புதிதாக அம்மனுக்கு கை செட் செய்து முலாம் பூசி அமைத்துள்ளதாக தெரியவருகிறது.
பழமை வாய்ந்த அம்மனின் முலாம் பூசப்பட்ட தங்க செட் பல லட்ச ரூபாய் மதிப்புடையதாக வார்த்தைகளால் தெரிவிக்கின்றார்கள்.
பழமை வாய்ந்த அம்மனின் முலாம் பூசப்பட்ட கை செட் காணாமல் போனது குறித்து அப்போது பணியில் இருந்த செயல் அலுவலர் எந்த புகாரும் கொடுக்காத மர்மம் என்ன?
திருச்சி பைரவர் திருக்கோவிலில் மற்றும் அதன் இணை குழு கோயில்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருக்கோயிலுக்கு சொந்தமான பழமையான திருக்கோயில் கலசங்கள், தங்க நகைகள், மற்றும் போலியான ஆவணங்கள் தயாரித்து பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
மர்மமான முறையில் திருட்டு மற்றும் போலி ஆவணம் மோசடிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார் அப்போது பணியில் இருந்த செயல் அலுவலர் அய்யம்மாள் மற்றும் அவருக்கு உடந்தையாக திருக்கோயிலுக்கு சம்பந்தமில்லாத நபர்கள் நடேசன், வசந்தகுமார், சாரதா, தனியார் கணினி சென்டர் நடத்தி வரும் மணி என்பவர் இணைந்து திருக்கோயில்களில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடைபெறுவதற்கு உறுதுணையாக செயல்பட்டுள்ளார்ரகள்.
முன்னாள் செயல் அலுவலர் அய்யம்மாள் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு அவருடன் கூட்டுச் சேர்ந்து போலி ஆவண மோசடிகளில் ஈடுபட்டு வந்த நபர்களையும் தற்போது உள்ள செயல் அலுவலர் பணியமர்த்தி நிர்வாகம் செய்து வருகிறார்.
திருக்கோயில்களில் தொடர்ந்து திருட்டு மற்றும் போலி ஆவண மோசடிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.
இதுகுறித்து காவல்துறையும், இந்து சமய அறநிலையத் துறையும், எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
திருக்கோயில் கோபுர கலசம் மற்றும் அம்மனின் முலாம் பூசப்பட்ட கை செட் , மற்றும் போலி ஆவண மோசடியில் பல கோடி ரூபாய் மோசடி குறித்து காவல்துறையும், இந்து சமய அறநிலையத் துறையும், தீவிர விசாரணை செய்து திருக்கோயில்களில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என
இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
( மேற்கண்ட திருக்கோவில்கள் குறித்து எங்க இயக்கத்தின் சார்பில் பல்வேறு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன் படி கேட்கப்பட்ட தகவல்களுக்கு உண்மைக்குப் புறம்பான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள் குறித்த உண்மைகளை வெளி உலகத்திற்கு தெரிவிக்கவும் , நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள் குறித்து எங்கள் இயக்கத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதற்காக கேட்கப்பட்ட தகவல்கள் எங்களால் கேட்கப்பட்ட தகவலையும், இந்து சமய அறநிலையத் துறையில் வழங்கப்பட்ட தகவலை முழுமையான ஆய்வு செய்தால் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள் முழுமையாக வெளிச்சத்திற்கு வர வாய்ப்புள்ளது).