Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மே 5 வணிகர்களுக்கான விடியல் மாநாடு.கால்கோள் விழாவில் விக்ரமராஜா பேட்டி.

0

 

திருச்சியில் மே 5ஆம் தேதி மு க ஸ்டாலின் பங்கேற்கும் வணிகர் தின மாநாடு:

திருச்சியில் 5 லட்சம் வணிகர்கள் பங்கேற்கும் திருப்புமுனை மாநாடாக அமையும்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி:

திருச்சியில் மே 5-ந் தேதி நடக்கும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் வணிகர் விடியல் மாநாட்டுக்கான கால்கோள் விழா நேற்று ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடந்தது.
கால்கோள் விழா.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5-ந் தேதி திருச்சி சமயபுரம் ஆட்டுச்சந்தை திடலில் 39-வது வணிகர் தின மாநில மாநாடு, தமிழக வணிகர் விடிய மாநாடாக நடத்தப்படுகிறது.

இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மாநாடு நடைபெறுவதையொட்டி நேற்று மாநாட்டுக்கான பந்தல் கால்கோள் விழா பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜூலு வரவேற்று பேசினார். மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, மாநில துணைத்தலைவர் எஸ்.கந்தன், திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து திரளான வணிகர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:-

மே 5-ந் தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டில் 5 லட்சம் வணிகர்களை திரட்டக்கூடிய திருப்புமுனை மாநாடாக அமையும். மாநாடு 50 ஏக்கர் பரப்பளவில் நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் வியாபாரிகளுக்கு இருக்கிற பல்வேறு இடர்பாடுகளை அகற்றுவதற்கான மாநாடாக இது அமையும். 38 ஆண்டுகளாக மாநாடு நடத்தினாலும் முதல் முறையாக மாநாட்டு மேடையேறி மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அவரிடம்  பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்த இருக்கிறோம். எனவே, இது வெற்றி மாநாடாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தமிழகம் முழுவதும் மாநாடு நடக்கும் அன்று வணிகர் நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டு, வணிகள் முழுமையாக பங்கேற்கவும் முடிவெடுத்துள்ளோம்.

ஆன்லைன் வர்த்தகத்தை, குறிப்பாக அந்நிய நாட்டு கம்பெனிகளை நாங்கள் தொடர்ந்து புறக்கணித்து கொண்டே, எதிர்த்து போராடியும் வருகிறோம். உள்நாட்டு சாமானிய வணிகர்களை ஆன்லைன் மூலமாக தொழில் செய்வதற்கு பேரமைப்பால் ஐ.டி.விங்க் தனியாக அமைக்கபப்ட்டு ஊக்கப்படுத்தி கொண்டு இருக்கிறோம்.

அதேபோன்று துபாய் சென்ற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில்  லூலூ குழுமை மார்க்கெட் வர கையெழுத்திட்டு இருக்கிறார். இதனால், பல்வேறு வியாபாரிகளுக்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டு இருக்கிறது. எனவே, முதல் அமைச்சரை வணிகர்கள் நேரில் சென்று, வியாபாரிகளுக்கு பாதிப்பில்லாத சூழலை உருவாக்க வேண்டும் என அழுத்தம் தர இருக்கிறோம்.

பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால், லாரி வாடகை நிர்ணயிப்பதிலும் குழப்பம் உள்ளது. அத்துடன் சுங்கச்சாவடி கட்டணமும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே,  சுங்க கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும் என பிரதரமை வலியுறுத்தி இருக்கிறோம். இதனால், அனைத்து பொருட்களும் 10 முதல் 20 சதவீதம் வரை விலை ஏற்றம் அடையக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.  எண்ணெய் விலையும் ஏறி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வணிகர்கள், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இணைந்து ஒரு கமிட்டி அமைக்க தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகிறோம்.

மாநாட்டில் வலுயுறுத்தப்படும் கோரிக்கை

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வணிகர் நல வாரியம் கிடப்பில் கிடக்கிறது. இது கலைஞர் கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம். அந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து சாமானியர்களும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு கட்டணச்சலுகையோடு உறுப்பினர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இழப்பீட்டை உயர்த்தி வழங்க வணிகர்நல வாரியம் மூலம் சீரமைக்க   கூடிய வாய்ப்பை முன்மொழிய இருக்கிறோம். வரி பிரச்சினையில் உள்ள குளறுபடியை நீக்க வலியுறுத்தப்படும்.

சிறு வியாபாரிகள் 12 முறைகளில் லைசென்ஸ் பெற்ரூ வரி கட்டுகிறார்கள். அதை ஒற்றை சாளர முறையில் உரிமம் வழங்க மாநாட்டில் முதல் அமைச்சரை வலியுறுத்த இருக்கிறோம்.  உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அறநிலையத்துறை கடை வாடகைகளை ஒரே சீராக மாநிலம் முழுவதும் நிர்ணயிக்கவும் வலியுறுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.