24வது வார்டு அலுவலகம் திறப்பு விழாவில் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கேட்டத் தலைவர், கவுன்சிலர் வழங்கினர்.
üதிருச்சி 24-வது வார்டு அலுவலகம் திறப்பு விழாவில்
தூய்மை பணியாளர்களுக்கு
நலத்திட்ட உதவிகள்.
கோ-அபிஷேகபுரம் கோட்ட தலைவர் மற்றும் கவுன்சிலர் வழங்கினர்.
திருச்சி மாநகராட்சி 24 -வது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோபியா விமலா ராணி வெற்றி பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற்றது முதல் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார் .திருச்சி மாநகராட்சி 24-வது வார்டு அலுவலகம் ராமலிங்க நகர் மெயின் ரோடு 5-வது கிராஸ் ,சிவா நகரில் புதிதாக கவுன்சிலர் வார்டு அலுவலகமாக மாற்றப்பட்டு அலுவல்களை அங்கு தொடங்கினார்,
மக்கள் குறைகளை கேட்டறிந்து , கவுன்சிலர் சோபியா விமலா ராணி மனுக்களை பெற்று கோட்டத் தலைவர் வழியாக மேயரிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார் .

வார்டு அலுவலகத்தில் கல்லாங்காடு நுண் உரம் செயலாக்க மையம் ஆரம்பிக்கப்பட்ட 5வது ஆண்டு தினத்தையொட்டி வார்டில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், சூப்பர்வைசர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களை கவுரப்படுத்தி இலவச வேஷ்டி ,சேலை மற்றும் மதிய உணவு ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் சோபியா விமலா ராணி தலைமை தாங்கினார். தூய்மை பணியாளர்களுக்கு உதவிகளை கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் வழங்கினார்.
குப்பை தொட்டிகள் இல்லாத தூய்மை திருச்சி நகரம் என்ற இலக்குடன் தினமும் அயராது குப்பைகளை அகற்றி அவற்றை கல்லாங்காட்டில் அமைந்துள்ள நுண்ணுயிர் உரமாக மாற்றும் கிடங்கிற்கு கொண்டு சேர்க்கும் தூய்மை பணியாளர்களையும், அவர்களை ஊக்குவிக்கும் கவுன்சிலர் . சோபியா விமலாராணியை உதவி ஆணையர் செல்வ பாலாஜி,துப்புரவு ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
இந்நிகழ்ச்சியில் உதவி கமிஷனர் செல்வ பாலாஜி ,திமுக பகுதி செயலாளர் கண்ணன், காங்கிரஸ் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் என்ஜினியர் பேட்ரிக்ராஜ்குமார், பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோ , திமுக வட்டத்தலைவர் ராபின்சன்,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரன், வக்கீல் வித்யாதரன் ,வார்டு தலைவர் காங்கிரஸ் ரவி மற்றும் பிராகிரஸ் டிரஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .