Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி நத்தர்வலி தர்கா அறங்காவலராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது கவுஸ்க்கு இயூமுலீ தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் வாழ்த்து.

0

திருச்சி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்தர்வலி தர்கா அறங்காவலராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் மவ்லவி அல்ஹாபிழ் ஏ.அல்லா பகஷ் என்ற முஹம்மத் கவுஸ் நியமனம் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வாழ்த்து .

திருச்சி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்தர்வலி தர்கா அறங்காவலராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் மவ்லவி அல்ஹாபிழ் ஏ.அல்லா பகஷ் என்ற முஹம்மத் கவுஸ் நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வாழ்த்து தெரிவித்தார்.

திருச்சி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்தர்வலி தர்கா அறங்காவலராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் மவ்லவி அல்ஹாபிழ் ஏ.அல்லா பகஷ் என்ற முஹம்மத் கவுஸ் அவர்கள் செவ்வாய்கிழமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன்
அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் கூறுகையில் : ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்தர்வலி தர்கா அறங்காவலராக பணியாற்ற வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தமைக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இந்த பணி என்பது அனைவருக்கும் பொதுவானது. கட்சி பெயரை எக்காரணம் கொண்டு பயன்படுத்தக் கூடாது. எந்த அளவுக்கு பொதுமக்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டுமோ அந்த அளவுக்கு நன்மைகள் செய்ய வேண்டும். தர்காவை முன் மாதிரியான உருவாக்க வேண்டும் இவ்வாறு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பேசினார்.

திருச்சி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்தர்வலி தர்காவின் அறங்காவலராக தமிழ்நாடு அரசு வக்ஃப் வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் அல்ஹாபிழ் ஏ.அல்லா பகஷ் என்ற முஹம்மத் கவுஸ் அவர்களுக்கு நேற்று இரவு
நத்தர்வலி தர்கா ஆர்ச் முன்பாக
தர்காவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்தர்வலி அவர்களின் மேலான மதர்க்கு மரியாதை செலுத்தினார்.

இந்த இரு நிகழ்ச்சிகளில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான்,தெற்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் பீர் முஹம்மது, ஹாஜி சம்சுதீன், எம்.கே.எஸ். ஜமால், மாநில எம்.எஸ்.எப். பொதுச் செயலாளர் ஏ. எம். எச். அன்சார் அலி, தெற்கு மாவட்ட துணைத்தலைவர் நூர் முஹம்மது , தெற்கு மாவட்ட யூத் லீக் செயலாளர் ஜி. எம். எச். சையது ஹக்கிம், தெற்கு மாவட்ட யூத் லீக் பொருளாளர் எம். சாதிக்குள் அமீன் , திருச்சி தெற்கு எஸ்.டி.யூ. மாவட்ட தலைவர் கே.கே. மஸ்தான், திருச்சி தெற்கு எஸ்.டிஜயூ. மாவட்ட செயலாளர் ஷாஜஹான், திருச்சி தெற்கு எஸ்.டி.யூ. மாவட்ட பொருளாளர் பாடகர் பி. முஹம்மது ரஃபீக், திருச்சி தெற்கு எம்.எஸ்.எப். மாவட்ட செயலாளர் அப்துல் பாஸித், திருச்சி தெற்கு எம்.எஸ்.எப். மாவட்ட துணைத் தலைவர் கவுஸ் முஹம்மத், மாணவரணி அப்சல்கான், முகமது யூசுப், முஸ்லிம் லீக் 12வது வார்டு செயலாளர் போட்டோ ஜாகீர், முகமது வஜீர், திருவரம்பூர் தொகுதி துணை அமைப்பாளர் அரியமங்கலம் சையது முஸ்தபா, மணிச்சுடர் திருச்சி மணிச்சுடர் ஊடகவியலாளர் எம்.கே ஷாகுல் ஹமீது, காஜா நகர் பிரைமரி தலைவர் கே.எம்.கே. பைஜூர் ரஹ்மான், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 51 வது வார்டு தலைவர் என். கே. அமிருதீன், 49 வார்டு ஜாபர், நவாபு, திமுகவைச் சார்ந்த ஆட்டோ சலீம், பர்மா ஹனிபா, தர்கா பகுதியைச் சார்ந்த டைலர் அஸ்கர் அலி, ஜாகிர் உசேன், எஸ் டி யு ஆட்டோ அப்துல் சலாம், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் பரக்கத் அலி மற்றும் தர்காவில் பகுதியில் உள்ள அனைத்து கட்சியினர்,

திருச்சி தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.