Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய (05-04-2022) ராசி பலன்கள்

0

 இன்றைய (05-04-2022) ராசி பலன்கள்

மேஷம்
ஏப்ரல் 05, 2022

 

குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். தொழில் ரீதியான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் வருமானம் மேம்படும். வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகளும், கலைத்துவமும் வெளிப்படும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : அனுபவம் கிடைக்கும்.

பரணி : அறிமுகம் உண்டாகும்.

கிருத்திகை : கலைத்துவம் வெளிப்படும்.
—————————————

 

ரிஷபம்
ஏப்ரல் 05, 2022

 

உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். சமூகப் பணிகளில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பார்த்த சில உதவி சாதகமாக அமையும். தொழில் ரீதியான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பயணங்களில் நிதானம் அவசியம். சுகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

ரோகிணி : முயற்சிகள் ஈடேறும்.

மிருகசீரிஷம் : நிதானம் அவசியம்.
—————————————

 

மிதுனம்
ஏப்ரல் 05, 2022

 

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

திருவாதிரை : தன்னம்பிக்கை மேம்படும்.

புனர்பூசம் : தீர்வு உண்டாகும்.
—————————————

 

கடகம்
ஏப்ரல் 05, 2022

 

குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

புனர்பூசம் : நம்பிக்கை மேம்படும்.

பூசம் : மேன்மை உண்டாகும்.

ஆயில்யம் : சேமிப்பு அதிகரிக்கும்.
—————————————

 

சிம்மம்
ஏப்ரல் 05, 2022

 

வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எண்ணங்களில் தெளிவும், புத்துணர்ச்சியும் காணப்படும். வாழ்க்கை துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். மதிப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : முன்னேற்றமான நாள்.

பூரம் : தெளிவு பிறக்கும்.

உத்திரம் : ஒத்துழைப்பு மேம்படும்.
—————————————

 

கன்னி
ஏப்ரல் 05, 2022

 

திட்டமிட்ட பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்களின் வழியில் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை

உத்திரம் : பயணங்கள் சாதகமாகும்.

அஸ்தம் : சிந்தித்து முடிவெடுக்கவும்.

சித்திரை : நெருக்கடிகள் நீங்கும்.
—————————————

 

துலாம்
ஏப்ரல் 05, 2022

 

மனதில் இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் இழுபறியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காலதாமதமாக கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்களுடன் தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

சித்திரை : குழப்பமான நாள்.

சுவாதி : காலதாமதம் உண்டாகும்.

விசாகம் : விவாதங்களை தவிர்க்கவும்.
—————————————

 

விருச்சிகம்
ஏப்ரல் 05, 2022

 

வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். தெளிவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கேட்டை : மகிழ்ச்சியான நாள்.
—————————————

 

தனுசு
ஏப்ரல் 05, 2022

 

பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு சாதகமாக அமையும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

மூலம் : முன்னேற்றமான நாள்.

பூராடம் : எண்ணங்கள் கைகூடும்.

உத்திராடம் : சாதகமான நாள்.
—————————————

 

மகரம்
ஏப்ரல் 05, 2022

 

மனதில் இனம்புரியாத சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாழ்க்கை துணைவர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புரிதல் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

திருவோணம் : ஒத்துழைப்பு மேம்படும்.

அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.
—————————————

 

 

கும்பம்
ஏப்ரல் 05, 2022

 

தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வாகனப் பயணம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உழைப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

அவிட்டம் : நெருக்கடிகள் உண்டாகும்.

சதயம் : மகிழ்ச்சியான நாள்.

பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
—————————————

 

மீனம்
ஏப்ரல் 05, 2022

 

தனவரவில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். வியாபார பணிகளில் அனுகூலம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தாமதம் அகலும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

பூரட்டாதி : இழுபறிகள் மறையும்.

உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ரேவதி : ஒத்துழைப்பு மேம்படும்.
—————————————

Leave A Reply

Your email address will not be published.