Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விளம்பரத்தில் தான் திமுக இயங்கி வருகிறது இல்லை என்றால் காணாமல் போய்விடும். திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

0

விளம்பரத்தில் தான் திமுக இயங்கி வருகிறது இல்லை என்றால் காணாமல் போய்விடும்.
திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்திருந்தனர். அதன்படி திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட மற்றும் வருவாய் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் சார்பில் திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் அருகே இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி பேசியதாவது:-

இந்த ஆர்பாட்டத்தின் நோக்கம் ,மக்கள் இரண்டு ஆண்டுகளாக கொரோனோவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் – இந்நிலையில் இந்த நேரத்தில் இந்த விடியா அரசு 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி உள்ளது.
மக்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் இப்படி வரியை உயர்த்தி உள்ளது கண்டனத்துக்கு உரியது.

ஸ்டாலினுக்கு மக்களை பற்றி அல்லாமல், அவரது வீட்டு மக்களை பற்றி தான் கவலை பட்டு கொண்டு உள்ளார்.

வேலை இல்லாமல், வாழ்வாதராமே இல்லாத நிலையில் மக்கள் உள்ள நிலையில் இந்த வரியை உயர்த்தி உள்ளது.
இந்தியாவிலேயே அதிகமாக உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் உள்ள மாநிலம் தமிழகம் என்று நல்ல பெயரை அ.தி.மு.க. ஆட்சியில் பெற்று தந்தோம். 52 லட்சம் மாணவர்களுக்கு
மடிக்கணினிகளை வழங்கினோம்.ஏழை மாணவர்களுக்கு பலன் அளிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்ய முயற்சி செய்கிறீர்கள்.

ஒரு சிமெண்ட் மூட்டைக்கு 30 ரூபாய் திமுகவிற்கு செல்கிறது.அப்படி என்றால் எவ்வளவு கோடி செல்லும் என எண்ணி பார்க்க வேண்டும்.

ஏதோ விளம்பரத்தில் தான் தி.மு.க. இயங்கி வருகிறது. இல்லை என்றால் காணாமல் போய் விடும். 10 மாதத்தில் நீ என்ன திட்டத்தை கொண்டு வந்தாய். நான் கொண்டு வந்த திட்டத்திற்கு எல்லாம் நீங்கள் ரிப்பன் கட் பண்ணி வருகிறீர்கள்.

நாம் பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைத்து வருகிறார்கள்.10 மாதத்தில் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் என்ன ?

ஊர் ஊராக சென்று திண்ணையில் படுதாவை போட்டு பெட்டியில் குறைகளை போடுங்கள் என்றும், அப்படி கோரிக்கை நிறைவேவில்லை என்றால் நேரில் வந்து பாருங்கள் என்றார். இது வரை எவ்வளவு பெயரை நீங்கள் சந்தித்து உள்ளீர்கள் ?.
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது சிறப்பு முகாமை ஏற்படுத்தி 9.45 லட்சம் மனுக்களை பெற்றோம். இதில் 5 லட்சத்திற்கும் அதிகமான மனுக்களுக்கு தீர்வு கண்டோம்.

ஸ்டாலின் துபாய்க்கு இன்ப சுற்றுலா சென்று வந்தார்.
தி.மு.க. கட்சி தொண்டர்கள் பணத்தில் ஏன் அரசு அதிகாரிகள் துபாய் செல்ல வேண்டும்?

துபாய் சர்வதேச கண்காட்சி 10-வது மாதமே துவங்கி விட்டது – முடிய 6 நாள் இருக்க நம் முதல்வர் சென்று புதிய அரங்கை திறந்து வைக்கிறார்.

10 மாதமாக கொள்ளை அடித்த பணத்தை வைத்து துபாயில் முதலீடு செய்ய தான் ஸ்டாலின் சென்றார்.மக்கள் இப்படியே கடந்து சென்று விடுவார்கள் என்று எண்ணி விடாதீர்கள். மிக பெரிய போராட்டத்தை மக்கள் நடத்த போகிறார்கள்.இதனை எச்சரிக்கையாக கூறி கொள்ள விரும்புகிறேன்.

கதவனை கட்ட நாங்கள் நடவடிக்கை எடுத்தோம் அதையும் கைவிட்டு விட்டார்கள் – என்னென்ன நல்ல திட்டங்களை எல்லாம் நாம் கொண்டு வந்துள்ளோமோ அதை எல்லாம் கை விட்டு விட்டீர்கள்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருகிறது – சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது,காவல் துறை செயல் இழந்து விட்டது.

ஆன்லைன் ரம்மியை தடை செய்வோம் என அறிவித்தார் – கண்டிப்பாக இதனை தடை செய்ய வேண்டும் – இளைஞர்கள்,
மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பெண்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை – இதனை எல்லாம் செய்யவில்லை என்றால் எதிர்காலமே திமுகவிற்கு இருக்காது.

திராவிட மாடல் இது தானா ? அம்மா மினி கிளினீக் இப்போது மூடி விட்டார்கள் – அம்மா என்கிற பெயரை கேட்டாலே ஸ்டாலினுக்கு அலர்ஜி ஆகி விடுகிறது.

மின் வெட்டு இப்போது தான் ஆரமித்து உள்ளது.இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த துன்பமும் இல்லை என்கிறார். இந்த ஆட்சி இருப்பதே துன்பம் தான்.

பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து இருப்பதால், பக்கத்து மாநிலத்திற்கு சென்று தான் சரக்கு வாகனங்கள் டீசல் போடுகின்றனர்.இதனால்
நம் வரி வருவாய் எல்லாம் பக்கத்து மாநிலத்திற்கு செல்கிறது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டபேரவை தேர்தல் வந்தாலும் வரலாம். ஏனென்றால், பிரதமரே கூறி உள்ளார், ஒரே நாடு ஒரே தேர்தல் என்று. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

எனவே கிடைத்த வாய்பை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய பாருங்கள்.
எடப்பாடி கே.பழனிசாமி பேரூரை ஆற்றி நிறைவு செய்த பின்னர் அதிமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன், ப.குமார், பரஞ்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,
முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், வளர்மதி, பூனாட்சி, கே.கே.பாலசுப்பிரமணியன், சிவபதி, அண்ணாவி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்கள் சீனிவாசன்,
பொன்.செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் இந்திராகாந்தி, சந்திரசேகர், சின்னச்சாமி, பாலன், ரத்தினவேல், பிரின்ஸ் தங்கவேல், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுப்பு, கே.சி.பரமசிவம் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், வக்கீல் ராஜ்குமார் , பத்மநாதன், மனோகரன், ஜாக்குலீன், முத்துக்குமார், ராஜேந்திரன், சகாபுதீன், கவுன்சிலர்கள் அம்பிகாபதி, அரவிந்தன்,
பகுதி செயலாளர்கள் அன்பழகன், வெல்லமண்டி சண்முகம் , ஏர்போர்ட் விஜி எம்.ஆர்.ஆர். முஸ்தபா, நாகநாதர் பாண்டி,
கலைவாணன்,
நிர்வாகிகள் ஜவஹர்லால் நேரு, அழகரசன் விஜய், அப்பாஸ், இலியாஸ், ராமச்சந்திரன், சகாதேவ் பாண்டியன், ஏ.பி.கிருஷ்ணமூர்த்தி, தாயார் சீனிவாசன், நத்தர்ஷா, கே.டி.ஏ.ஆனந்த், என்.டி.மலைப்பன், ஈஸ்வரன், பொன். அகிலாண்டம், சிங்கமுத்து, அரப்ஷா, டைமண் தாமோதரன், மாணவரணி குமார், வசந்தம் செல்வமணி, எ.புதூர் வசந்தகுமார், என்ஜினியர்கள் ரமேஷ்,ராஜா, மற்றும் பாலாஜி,நாட்ஸ் சொக்கலிங்கம், எடத்தெரு பாபு,காசிப்பாளையம் சுரேஷ்குமார், தர்கா காஜா, கயிலை கோபி, கன்னியப்பன், வக்கீல்கள் சுரேஷ், சசிக்குமார், தாமரைச்செல்வன், அப்பாக்குட்டி, வண்ணார்பேட்டை ராஜன், பால்ராஜ் ஒத்தக்கடை மகேந்திரன், எடமலைப் பட்டிபுதூர் வசந்தகுமார்,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சூப்பர் நடேசன், ராவணன், எஸ்.பி.பாண்டியன், பாலசுப்பிரமணியன், பாஸ்கர்,கும்பக்குடி கோவிந்தராஜ், தெய்வ மணிகண்டன், வக்கீல்கள் அழகர்சாமி, முருகன், கவுன்சிலர் அனுசியா ரவிசங்கர், தஞ்சாயி பாலசுப்பிரமணியன்,திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், நிர்வாகிகள் அறிவழகன் விஜய், முத்துக்கருப்பன், அறிவழகன், பேரூர் கண்ணதாசன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், டைமன் திருப்பதி, துறையூர் பிரகாஷ், கவிதை மணி,வி.என்.ஆர் செல்வம், என்ஜினியர் ஜெயக்குமார் ,
ஆமூர்’ ஜெயராமன், உள்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.