சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்.திருச்சி டீ,காபி வர்த்தகர் நல சங்க கூட்டத்தில் தீர்மானம்.
பொதுமக்கள் மற்றும் வணிகர்களை பெரிதும் பாதிக்கும்
கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
திருச்சி டீ, காபி வர்த்தகர் நல சங்க கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சியில் டீ, காபி வர்த்தக நலச்சங்கம் சார்பில் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்க தலைவர் செல்லதுரை தலைமை தாங்கினார். சங்க அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வனிகர்கள் பயன்படுத்தும் கேஸ் சிலின்டரின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது, இதனை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும், சுங்க கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதை கைவிட வேண்டும், உணவு பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், திருச்சி மாநகர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து டீக்கடைகளையும் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அமைப்புச் செயலாளராக ராவுத்தர் ஷா, பொதுச்செயலாளராக முகமது ஜாபர் சாதிக் சங்க ஆலோசகராக அப்துல் ஹக்கீம், ஒருங்கிணைப்பாளராக கார்த்திகேயன், பொருளாளராக பழனிச்சாமி, சங்க ஆலோசகராக ராஜு, தலைவராக செல்லத்துரை, ஒருங்கிணைப்பு செயலாளராக ஜெயராமன், துணைச் செயலாளராக சுகுமார், செயலாளராக வி.பி.எஸ். மகாதேவன், துணைத்தலைவராக ஹாருண் பாட்ஷா, டிபன் கடை பொறுப்பாளர்களாக ஆறுமுகம் ,
அக்பர் அலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.