உங்களுக்கு ரூ.10 லட்சம் பணம் தருகிறேன் அரசு வேலை கொடுங்க என திருச்சி ஆட்சியரை அதிரடித்த நபர்.
‘திருச்சி மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அலுவலர் சரவணக்குமார், தலா, 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு, சமையலர் பணி வழங்கி இருக்கிறார்.
இதனால், நேர்காணல் வரை சென்ற எனது மகளுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே, நானும், 10 லட்ச ரூபாய் தருகிறேன்.
மகளுக்கு வேலை கொடுங்கள்’ என்று திருச்சி பெரிய மிளகுபாறையை சேர்ந்த சண்முகம் என்பவர் ஆட்சியரிடம் மனு கொடுத்ததால் இன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.