திருச்சியில் நடைப்பெற்ற போஷன் பக்வாடா சிறப்பு முகாம்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை அமைப்பு சார்பாக தேசிய அளவில் போசன் பக்வாடா திட்டம்,
6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் உயரம் மற்றும் உடல் எடை கணக்கீடு செய்து ஆலோசனை வழங்கும் சிறப்பு முகாம் மார்ச் 21 துவங்கி 27 வரை நடைப்பெற்றது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தனூர் மற்றும் கே.கே நகர் பகுதியில் 26-ம் தேதி ,வட்டார குழந்தைகள் மேம்பாட்டு அலுவலர் கவுசல்யா தலைமையில் நடைப்பெற்றது.
இதில் கவி சாரீட்டபில் டிரஸ்ட் ,நிர்வாக அறங்காவலர் வி.கவிதா, இயக்குனர் ஆர்.வி.கார்த்திகேயன் மற்றம் தொண்டு நிறுவன, தன்னாளர்வர்கள் பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவிகளுடன் ,
வட்டார அங்கன்வாடி பணியாளர்கள் ,வீடு வீடாக சென்று குழந்தைகளின் உடல் எடையினை கணக்கீடு செய்தனர்.
பெற்றோர்களிடம் ஊட்டசத்து அலுவலர் ரஞ்சனி ஆலோசனை வழங்கினார்.