திருச்சி ஜோசப் கல்லூரியில் இரத்ததான முகாம் – 200க்கு மேற்பட்ட மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர்
திருச்சி ஜோசப் கல்லூரியின் ஷெப்பர்ட் – விரிவாக்க மையம்,
நாட்டு நலப்பணித்திட்டம்
மற்றும் ரெட் ரிப்பன் கிளப் சார்பில் ரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமை கல்லூரி
கல்லூரி முதல்வர் அருட்தந்தை ஆரோக்கியசாமி சேவியர் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் செப்பர்டு விரிவாக்கத் துறை துறை இயக்குனர் அருட்தந்தை பெர்க்மான்ஸ், நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி ஆண்டனி ஜெயராஜ், செயலாளர் நிதிஷ்குமார், ஜோசப் கிறிஸ்துராஜ், பூர்ணம் விஸ்வநாதன்,
மற்றும் ரெட் ரிப்பன் கிளப் மாணவ மாணவிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.
திருச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மருத்துவர் வளர்மதி தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்த சேகரிப்பில் ஈடுபட்டனர். இம்முகாமில் இரத்த தானம் வழங்கிய மாணவ மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.