திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் விஜய் அரங்கில் அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் 9-வது ஆண்டு நிறுவன தின விழா நடைபெற்றது.
தமிழ் மாநில செயலாளர் கருப்பண்ணன் தலைமையில் தமிழ் மாநில அமைப்பாளர் ராஜன், தமிழ் மாநில பொதுச் செயலாளர் சு.வேந்திரன் முன்னிலையிலும் திருச்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் வரவேற்புரை ஆற்றினார்.
சாதனையாளர்களுக்கு விருது வழங்கி தமிழ் மாநிலத் தலைவர் சின்ராஜ் சிறப்புரையாற்றினார் .

நிறுவனத் தலைவர் ஜெயராமன் ஏற்புரையாற்றினார்.
திருச்சி மாவட்ட தலைவர் முகமது சர்புதீன் நன்றியுரையாற்றினார். கொரோனா காலத்தில் மக்களுக்காக காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து சமூக பணியாற்றிய ஆர்.கே.ராஜா அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.
இவருடன் மேலும் பலருக்கு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.