புதுச்சேரி கவர்னர்
தமிழிசை சவுந்தரராஜன் நாளை திருச்சி வருகை.
தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் நாளை காலை 8 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வருகிறார். இங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து கார் மூலம் தஞ்சை செல்லும் அவர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.
பின்னர் 11 மணிக்கு திருச்சி வந்து மீண்டும் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார் .
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திருச்சி வருகையையொட்டி திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.