உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உலக சாதனை பயணமாக திருச்சி வந்த எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு.
மகளிர் தினத்தை முன்னிட்டு 36 எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் ‘மகளிர் மேம்பாடு’ என்ற கருத்தை வலியுறுத்தி டெல்லியில் இருந்து புறப்பட்டு பேரணியாக சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி சென்றனர்.
அங்கிருந்து சென்னை செல்லும் வழியில் (மார்ச் 27) மாலை திருச்சி வந்தனர்.
வீராங்கனைகளின் மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று (மார்ச் 28) காலை திருச்சியிலிருந்து சென்னை புறப்பட்டது.
பேரணிக்கு திருச்சி திருவானைக்காவல் 5வது வார்டில் மஹாலக்ஷ்மி நாகராஜ் சார்பில் ஆண்டாள் கார்டனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் சென்னைக்கு உற்சாகமாக கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி,
5வது வார்டு மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் முத்துக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினர்.
இவர்கள் பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா வழியாக 6 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து தமிழ்நாடு வந்துள்ளனர்.
இந்தப் பயணத்தை விருக்ஷ்ஷா உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்தனர்.