திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள ஆனமலைஸ் டொயோட்டோ கார் ஷோரூமில் டொயோட்டா கூல் நியூ கிளான்ஸா கார் அறிமுக விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு கலந்து கொண்டு புதிய வாகனத்தினை அறிமுகம் செய்தார்.
முதல் விற்பனையை சர்மிளா பழனி மாணிக்கம் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
இவ்விழாவை ஆனமலைஸ் கிளையின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கடேசன், கிளை மேலாளர் அந்தோணிராஜ் விற்பனை மேலாளர் தினேஷ்பாபு ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.