திருச்சி தேசியக் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில் வைரவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் இரா.சுந்தரராமன் விழாவிற்குத் தலைமையேற்று தலைமையுரை வழங்கினார். புதுடெல்லியிலுள்ள தேசிய உடல் ஆய்வக முதன்மை விஞ்ஞானியும் இணைப் பேராசிரியருமான முனைவர் விஜயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இளம் தலைமுறையினர் எப்போதும் கூர்மையான மதியுடையோராகத் நிகழ்வதற்குக் கல்வி மட்டுமே பெருந்துணையாற்றும் என்றும், மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற்றுப் பயில்வதற்கான வழிமுறைகள் குறித்தும் தெளிவாக விளக்கினார்.
மேலும் இயற்பியல் துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக மாணாக்கர்கள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இயற்பியல் துறைப் பேராசிரியர் முனைவர் இராமசாமி சிறப்பு விருந்தினரை அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
முன்னதாக துறைத்தலைவர் முனைவர் பாரி வரவேற்புரை வழங்கினார். பேராசிரியர் முனைவர் அய்யனார் விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து நிறைவாக நன்றியுரை நல்கினார் . பேராசிரியர் பெருமக்களும் மாணவ மாணவிகளும் திரளாகப் பங்கேற்றனர்.