திருச்சியில் இந்தியா மற்றும் தமிழக சிலம்ப கோர்வை சார்பில் 3 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகளின் உலக சாதனை சிலம்ப போட்டி.
இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளைச் சேர்ந்த சிலம்ப வீரர் வீராங்கனைகளின் புதிய உலக சாதனை : இந்திய சிலம்ப கோர்வை மற்றும் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை பிரம்மாண்ட ஏற்பாடு.
இந்திய சிலம்ப கோர்வை மற்றும் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை சார்பில் சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இதில் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளைச் சேர்ந்த சிலம்ப வீரர் வீராங்கனைகள் இந்த உலக சாதனை நிகழ்வில் பங்கேற்று சிலம்பம் சுற்றினார்கள். அந்த வகையில் சிங்கப்பூரில் 47 பேர் இந்திய நேரப்படி அதிகாலை 2.30மணி முதல் 7 மணி வரை இடைவிடாது சிலம்பம் சுற்றிய நிலையில், இந்தியாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிலம்ப வீரர் – வீராங்கனைகள் 293 பேர் பங்கேற்று திருச்சி கி.ஆ.பெ விசுவநாதன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 7 மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை சுழற்சி முறையில் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை நிகழ்த்தியை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து மலேசியாவில் 63 சிலம்ப வீரர் வீராங்கனைகள் இந்திய நேரப்படி பிற்பகல் மூன்று மணி முதல் 9 மணி வரை சிலம்பம் சுற்றி புதிய சாதனை படைத்தனர். இந்த சாதனையானது சாதனை நடுவர்களால் ஆன்லைன் மூலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு லண்டன் ஹார்வேர்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. மேலும் பங்கேற்ற வீரர் வீராங்கனைகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதனிடையே சிலம்பத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்தவரும், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றவருமான திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி சுகித்தா காலை 7 மணி முதல் தொடர்ச்சியாக 4 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை நிகழ்த்தினார். இந்த சாதனை அங்கீகரிக்கப்பட்டு லண்டன் ஹார்வர்ட் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று சாதனைக்கான சான்றிதழும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் வழங்கப்பட்டது .
மேலும் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு லண்டன் ஹார்வேட் உலக சாதனை புத்தக பதக்கத்தை கொடைக்கானல் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி செயலாளர் ஸ்ரீமத் சுவாமி கங்காதரானந்த அவர்கள் வழங்கினார்.
ஜி வி என் மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜெயபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளை வாழ்த்தினார்.
இன்ஜினியர் கோபால்சாமி, டாக்டர் செந்தில் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய சிலம்பக் கோர்வை தலைவரும், தமிழ்நாடு சிலம்ப கோர்வை துணைத் தலைவருமான மோகன் சிறப்பாக செய்திருந்தார்.