திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே
பிரபல ஓட்டலில் வாலிபர் மர்ம சாவு.
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பிரபல ஹோட்டலில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பிரபல ஓட்டலில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (வயது 22 ) என்பவர் தங்கியிருந்தார். நேற்று இரவு அவர் அறையில் தலைக்குப்புற இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து ஓட்டல் ஊழியர்கள் கண்டோன்மண்ட் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் உடனடியாக விரைந்து வந்த போலீசார்
உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது கொலையா அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி
ஓட்டலில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.