திருச்சியில் வியாபாரி ,
நடைபயிற்சி சென்றவர்களிடம் பணம், செல்போன் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட
6 வாலிபர்கள் கைது.
திருச்சியில் அடுத்தடுத்து நடந்த வழிப்பறி சம்பவத்தில் 6 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
திருச்சி பொன்மலை பொன்னேரி புரத்தைச் சேர்ந்தவர் குழந்தை இயேசு ராஜ் ( வயது 55). இவர் திருச்சி பொன்மலைபட்டி பஜார் ஆஞ்சநேயர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் இவரிடம் கத்திமுனையில் மிரட்டி பணத்தை பறித்து விட்டு சென்று விட்டார்.இதுகுறித்த புகாரின் பெயரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து திருச்சி மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த சிவக்குமார் என்ற வாலிபரை கைது செய்தனர் .அவர் மீது பொன்மலை காவல் நிலையத்தில் 12 வழக்குகளும் ,ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் திருச்சி மேலகல்கண்டார் கோட்டை கம்பிகேட் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த ரமேஷ் என்பவரிடம் கத்திமுனையில் மிரட்டி பணத்தை பறித்ததாக மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த சிவக்குமார் என்ற வாலிபரை கைது செய்தனர் இவரிடம் இருந்து பணம் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி வரகனேரி குழுமி தெருவை சேர்ந்தவர் சேகர். ( வயது 53) சோப்பு வியாபாரி. இவர் காந்தி மார்க்கெட் வடக்கு தையல்காரத்தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரிடம் மிரட்டி, வழிப்பறி செய்ததாக குமார் ,சரவணன், வேல்முருகன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் குமார் மீது நான்கு வழக்குகளும், சரவணன் மீது 5 வழக்குகளும், வேல்முருகன் மீது 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் திருச்சி கே.கே.நகர் கிருஷ்ணமூர்த்தி நகர் தொண்டைமான் காலனியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மனைவி செல்லம்மாள் என்கிற மூதாட்டியிடம் ரூ 20,000 பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றதாக திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த கார்த்தி என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது திருச்சியில் 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவரிடமிருந்து பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.