Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாலைமுரசு அதிபர் மீது பொய் புகார் கூறும் கரிக்கோல்ராஜனை வன்மையாக கண்டிக்கிறோம். முனைவர் ஜான் ராஜ்குமார்.

0

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி விவகாரத்தில் மாலைமுரசு ஆசிரியர் இரா. கண்ணன் ஆதித்தனார் மற்றும் மாலைமுரசு அதிபர் ராமச்சந்திர ஆதித்தனார் ஆகியோர் மீது பொய் புகார் கூறி வரும் பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜனை வன்மையாக கண்டிக்கிறோம் என நெல்லை மக்கள் நலப்பேரவை மற்றும் ஜே.கே.சி. கட்டளை நிறுவன தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார் அறிக்கை.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வரலாற்றை முதலில் அறிந்து கொள்ளலாம் :-

இந்த வங்கி 1921 -ல் நாடார் வங்கி என்ற பெயரில் நாடார்களின் நலன் கருதி தூத்துக்குடியில் தொடங்கப்பட்ட வங்கி .

1962-ல் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த வங்கியை தூத்துக்குடி, சிவகாசி, விருதுநகர் நாடார்கள் நிர்வாகம் செய்து வந்தார்கள்.

இந்த சூழலில் ஒரு பிரிவை சேர்ந்த நாடார்கள் எஸ்ஸார் நிறுவனத்திடம் தங்கள் பங்குகளை நல்ல விலைக்கு விற்று விடுகிறார்கள். இதனால் 67 29 சதவீத பங்குகள் எஸ்ஸார் நிறுவனத்தின் 6 கம்பெனிகளும் செல்லுகிறது.

32.71 சதவீதம் மட்டுமே நாடார்களிடம் மிஞ்சுகிறது.

இந்த மாற்றத்தை நாடார் சமுதாய சேர்ந்தவர்கள் எதிர்த்தனர்.

ரிசர்வ் வங்கியும் தனது கொள்கைப்படி எஸ்ஸார் நிறுவனத்தின் கம்பெனிகளுக்கு பெயர் மாற்றம் செய்ய மறுத்துவிட்டது.

இந்த நேரத்தில் எஸ்ஸார் நிறுவனம் தனது கம்பெனிகள் உரிமைகளை ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு மாற்றுகின்றது.

மேற்படி 67.29 சதவீத பங்குகளை மீட்பதற்கு நாடார் மகாஜன வங்கி முதலீட்டாளர்கள் மன்றம் என்ற ஒரு அறக்கட்டளை
1990-ல் அமைக்கப்படுகிறது.
இந்த மன்றத்தின் 30 உறுப்பினர்கள் அறங்காவலராக இருக்கிறார்கள் இதன் நோக்கம் என்னவென்றால் நாடார்களிடம் இருந்து பணம் பெற்று ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து வங்கியின் பங்குகளை திரும்ப பெறுவது.

பங்குகளை நாடார்கள் வசம் ஒப்படைப்பது .
அந்த மன்றத்தின் தலைவர் மறைந்த மாலைமுரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் ஆவார். இந்த தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மீட்கும் போராட்டத்தில் தன்னை முழுவதுமாக ஈடுபட்டவர் பா. ராமச்சந்திர ஆதித்தனார்.இது சமுதாய மக்களுக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த அனைத்து சமுதாய தமிழக மக்களுக்கும் நன்கு தெரியும்.

ஆனால் தற்போது இரா.கண்ணன் ஆதித்தனார் மீது புகார் கூறி வருவது ஏற்புடையதல்ல.

எனவே பொய் புகார் கூறி வரும் பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய கரிக்கோல்ராஜை வன்மையாக கண்டிக்கிறோம்.

என நெல்லை மக்கள் நலப்பேரவை மற்றும் ஜே கே சி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ப.ஜான் ராஜ்குமார் தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.