Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொரோனா தோற்றால் நேற்று ஒரே நாளில் திருச்சியில் 580 பேர் பாதிப்பு.

0

'- Advertisement -

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று 3-வது அலை வேகமாக பரவி வருகிறது.

Ad banner

திருச்சி மாவட்டத்திலும் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில் திருச்சியில் நேற்று புதிதாக கொரோனா தொற்று 580 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 431 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தொடர் சிகிச்சையில் 3,579 பேர் உள்ளனர்.

TVK ad

இதுவரை கொரோனாவால் 84,459 பேர் பாதிப்பும், 79,768 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

நேற்று கொரோனாவுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 79 வயது முதியவர் மற்றும் 76 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 1,112 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆர்.டி.-பி.சி.ஆர். என்னும் கொரோனா பரிசோதனை நேற்று மட்டும் 4,385 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 580 பேருக்கு தொற்று உறுதி ஆனது. இது 10.7 சதவீதம் ஆகும்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.