Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஊரடங்கு விதிமீறல்.அபராதமாக ரூ.40 லட்சத்துக்கும் மேல் வசூல்

0

'- Advertisement -

 

கொரோனா மற்றும் ஒமைக்ரானை கட்டுப்படுத்தும் வகையில் தினமும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பொதுமக்களுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படுகிறது.

அந்தவகையில் திருச்சி மாநகரின் முக்கிய சந்திப்பு பகுதிகள், முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோரை நிறுத்தி விசாரணை செய்து, முககவசம் அணிந்து இருக்கிறார்களா? என்று உறுதி செய்யப்படுகிறது. மேலும் உரிய காரணமின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராத தொகை வசூல் செய்யப்பட்டது,

அந்தவகையில் கடந்த 6-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து முககவசம் அணியாமல் வந்த 9,734 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.19 லட்சத்து 46 ஆயிரத்து 800 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டது,

சமூக இடைவெளியின்றி செயல்பட்டவர்கள் மற்றும் ஊரடங்கின்போது கடைகளை திறந்து வைத்திருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மொத்தம் ரூ.21 லட்சம் அபராத தொகையாக வசூல் செய்யப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.