1.
திருச்சியில்
டிரைவர் உள்பட
2 பேர் மாயம்.
திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரியாஸ் அலி கான்ஃ இவரது மகன் சதாம் உசேன்.( வயது 27). இவர் டைல்ஸ் ஷோரூம் ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ரியாஸ் அலி கான் அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2.
இளம்பெண் மாயம்
திருச்சி தென்னூர் பென்ஷனர் தெருவைச் சேர்ந்தவர் நவரத்தினம். இவரது மகள் திலகா. (வயது 19). இவர் திண்டுக்கல்லில் உள்ள மில் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் .நேற்று தென்னூர் பென்சனர் தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து பால் வாங்கி விட்டு வருவதாக கூறி சென்றார் .பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் சுமதி கொடுத்த புகாரின் பெயரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3.
எடமலைப்பட்டிபுதூர், பாலக்கரையில்
கஞ்சா, லாட்டரி விற்றதாக
பெண் உள்பட 4 பேர் கைது.
2.5கிலோ
கஞ்சா பறிமுதல்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மற்றும் பாலக்கரை பகுதியில் கஞ்சா, லாட்டரி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் அந்தந்த பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் சரகம் மில்காலனி பகுதியில் கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் காந்தி நகரைச் சேர்ந்த தாமோதரன், ராம்ஜிநகர் மில் காலனியைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி சுசீலா,ராம்ஜிநகர் மில் காலனியைச் சேர்ந்த ஜெகநாதன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் திருச்சி கெம்ஸ்டவுண் ரயில்வே பாலம் அருகில் கஞ்சா மற்றும் லாட்டரி விற்றதாக பாலக்கரை கெம்ஸ்டவுண் பகுதியைச் சேர்ந்த மேத்யூ (வயது 21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது பாலக்கரை காவல் நிலையத்தில் 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரிடம் இருந்து ஒண்ணேகால் கிலோ கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.