Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி. வலுவான நிலையில் இந்திய அணி.

0

'- Advertisement -

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Ad banner

இதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியில் விராட் கோலி, புஜாரா ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தாலும், துவக்க வீரர் மயங்க் அகர்வால் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 150 ரன்கள் குவித்த மயங்க் அகர்வால், அஜாஸ் படேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

TVK ad

நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேலின் மாயாஜால சுழலில் சிக்கிய இந்திய அணி 109.5 ஓவர்களில் 325- ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஜாஸ் படேல் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையை நிகழ்த்தினார்.

இதையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை துவங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து அணி தத்தளித்தது. 28.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்படித்த நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்து வீச்சில் இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

நியூசிலாந்துக்கு பாலோ- ஆன் கொடுக்காமல் இந்திய அணி 2-வது இன்னிங்சை துவங்கியது. 263 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் எதுவும் இழக்காமல் 69-ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 29 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணியைவிட 332-ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.