Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியன் அணிக்கு புதிய கேப்டன் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்ட பின் முதல் டி 20 போட்டி இன்று நடைபெறுகிறது.

0

'- Advertisement -

20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து 20 ஓவர் உலக கோப்பையுடன் விராட்கோலி விலகினார். இதனை அடுத்து 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

Ad banner

புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். புதிய தலைமையின் கீழ் இந்திய அணி களம் காணும் முதல் போட்டி என்பதால் வழக்கத்தை விட அதிகமான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்திய அணியில் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் பட்டேல், அவேஷ்கான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

TVK ad

இன்றைய போட்டிக்கான இரு அணியின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், வெங்கடேஷ் அய்யர் அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், அக்‌ஷர் பட்டேல், ஆர்.அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், கிளைன் பிலிப்ஸ், மார்க் சாப்மன், டிம் செய்பெர்ட், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், கைல் ஜாமிசன், டிம் சவுதி (கேப்டன்), ஆடம் மில்னே அல்லது பெர்குசன், சோதி.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.