Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சேலத்தில் இயேசுவின் புதுப்பிக்கப்பட்ட 65 அடி உயர திரு உருவ சிலை.

0

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில் 1957ஆம் ஆண்டு புனித செபஸ்தியார் கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயம் கட்டப்பட்டது.

60 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாட்டில் இருந்த இக்கோவில், 2008இல் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது அகற்றப்பட்டது.

இதனையடுத்து, அப்போதைய சேலம் ஆயர் சிங்கராயர் முயற்சியால் இப்பகுதியிலேயே புதிய தேவாலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் முகப்பில், வாழப்பாடி தொழிலதிபர் பி.லாசர் குடும்பத்தினரின் செலவில்,

புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, 15 அடி அகல பாதம், 5 அடி அகல முக அமைப்போடு 65 அடி உயரத்தில், ரூ.20 லட்சம் செலவில் இயேசு கிறிஸ்துவின் முழு திருவுருவ பைபர் சிலை அமைக்கப்பட்டது.

இச்சிலை 2013ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி, ஆயர் சிங்கராயனால் அர்ச்சிப்பு செய்து, வழிபாட்டிற்காக அர்பணிக்கப்பட்டது.

பாதத்தில் இருந்து தலை வரை உட்புறத்தில் ஏணி அமைக்கப்பட்டுள்ளது இச்சிலையின் சிறப்பம்சமாகும்.

தற்போது இந்தியாவில் மிக உயரமான இயேசு கிறிஸ்து சிலைகளில் ஒன்றாக விளங்கி வரும் இச்சிலைக்கு, ரூ.3 லட்சம் செலவில், வண்ணம் தீட்டி உயிரோட்டமாக புதுப்பித்துள்ளனர்.

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் வான மேகங்கள் சூழ தத்ரூபமாக காட்சியளிக்கும், இந்த 65 அடி உயர இயேசு கிறிஸ்துவின் திருவுருவச் சிலையை ஏராளமானோர் வழிபட்டு, ரசித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.