திருச்சி ரயில் நிலைய நடைமேடையில் காணாமல் போன சிறுவர்கள் மீட்ட ரயில்வே போலீசார்

இன்று புதன்கிழமை (24.06.2026) அதிகாலை 5.50 மணிக்கு திருச்சி எம்ஜிஆர் நகர், கொட்டப்பட்டு, பாவை பவுண்டேஷன் , காப்பகத்தில், இருந்து காணாமல் போன சிறுவர்கள் கணேஷ் ( வயது 17) வீரேந்திரன் ஷா (வயது 13) என்பவர்களை திருச்சி ரயில் நிலைய நடைமேடை அலுவலில் இருந்த குற்றப்பிரிவு தலைமை காவலர் பிலால் மொய்தீன் மற்றும் பெண் காவலர் அர்ச்சனா ஆகியோர் ரோந்து பணியில் இருக்கும் போது நடைமேடை 5 ல் சுற்றித்திரிந்த சிறுவர்களை விசாரணை செய்ததில் சிறுவர்கள் காப்பகத்தில் இருந்து காணாமல் போனவர்கள் என்று தெரிய வர அவர்களை மீட்டு திருச்சி ரயில் நிலைய ஆய்வாளர் வீரம்மாள் அவர்கள் மூலம் பாவை பவுண்டேஷன் மேலாளர் முரளீசுவரன் மற்றும் அருண் சின்னையா கணபதி அவர்களை தொடர்பு கொண்டு ரயில் நிலையம் வரவழைத்து அவர்களிடம் விசாரணை செய்ததில் திருச்சி மாநகரம், பொன்மலை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து , Boy missing (சிறுவர்கள் காணவில்லை என்று ) வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று கூற பொன்மலை குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மோகன சுந்தரி அவர்களுக்கு தகவல் தெரிவித்து, திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர்கள் முன்னிலையில் சிறுவர்களை நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

