Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் இந்திய அணி அறிவிப்பு.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் இந்திய அணி அறிவிப்பு.

0

'- Advertisement -

நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் நவம்பர் 17 அன்று தொடங்கி, நவம்பர் 21 வரை நடைபெறுகிறது. பின்னர் டெஸ்ட் தொடர் நவம்பர் 25-ல் தொடங்கி, டிசம்பர் 7 அன்று நிறைவுபெறுகிறது.

Ad banner

ஏற்கெனவே 20 ஓவர் தொடருக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில்

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்டில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே முதல் டெஸ்டில் ரகானே தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. புஜாரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2-வது டெஸ்டில் விராட் கோலி அணியினருடன் இணைந்து கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா, ரிஷப் பந்த், பும்ரா, ஷமி ஆகியோர் அணியில் பங்கேற்கவில்லை.

முதல் டெஸ்ட் கான்பூரில் நவம்பர் 25 அன்றும் 2-வது டெஸ்ட் மும்பையில் டிசம்பர் 3 அன்றும் தொடங்குகின்றன.

தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய டெஸ்ட் அணி விவரம்:

ரகானே (முதல் டெஸ்ட் கேப்டன்), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், (விக்கெட் கீப்பர்கள்) சஹா, கே.எஸ். பரத் ஜடேஜா, அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, விராட் கோலி

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.