Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்மலை இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர் மனு.

பொன்மலை இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர் மனு.

0

திருச்சி, கீழஅம்பிகாபுரத்தில்
வசித்து வருபவர் வழக்கறிஞர் தங்கவிக்ரம்.

இவர் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

நான்திருச்சி,மதுரை, சென்னை,கடலூர் கோர்ட்டுகளில் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன்.

திருச்சி பொன்மலை, தங்கேஸ்வரி நகரில் வசித்து வரும் அன்புக்கரசி மற்றும் அவரது மகள் துளசி ஆகியோர் மீது அரியமங்கலம் ரயில் நகரைச் சேர்ந்த சுமதி என்பவர் பொன்மலை போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் விசாரணைக்கு அழைத்திருப்பதால் வந்து உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

எனவே அன்புக்கரசி சார்பில் அவருடன் நான் பொன்மலை இன்ஸ்பெக்டர் நிக்சன் முன்னிலையில் ஆஜரானேன்.

அப்போது இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் நாங்கள் அதன் மூலமாகவே தீர்வு காண விரும்புகிறோம் என கூறி விட்டோம்.

இந்த நிலையில் நான் ஊரில் இல்லாத சமயத்தில் வேறு ஒரு வக்கீல் மூலம் மேற்கூறிய பிரச்சினையை நீதிமன்றம் மூலம் தீர்த்துக்கொள்கிறோம் என்று எனது கட்சிக்காரர்கள் பொன்மலை போலீஸ் ஸ்டேசனிற்கும், போலீஸ் கமிஷனருக்கும் நோட்டீஸ் அனுப்பி விட்டார்.

இந்த நிலையில் ரயில்நகர் பகுதியைச் சேர்ந்த சுமதி நான் போலி வக்கீல் என்றும் என்னை விசாரிக்க வேண்டும் என்றும் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் 10ம் தேதி தேதியிட்டு பொன்மலை போலீசார் சட்டப்பிரிவு 160 மற்றும் 91 சி ஆர் பி சி பிரகாரம் அழைப்பானை அனுப்பியுள்ளனர்.

அன்புக்கரசி விவகாரத்தில் நான் பொன்மலை. காவல் நிலையம் சென்று தலையிட்டதால்,

சுமதிக்கு தன்னால் சாதகம் செய்ய முடியவில்லை என்பதால் அவரை தூண்டி விட்டு என் மீது சுமதி மூலம் தங்களிடம் பொய்யான புகார் அளிக்க இன்ஸ்பெக்டர் நிக்சன் தூண்டியுள்ளார்.

இதனால் எனக்கு மன உளச்சலும் சமுதாயத்தில் எனக்குள்ள நல்ல பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே இன்ஸ்பெக்டர் நிக்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அளிக்கப்பட்ட பொய்யான புகார் மனு தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளேன் என தங்கவிக்ரம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.