Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் வேண்டுகோள்.

அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் வேண்டுகோள்.

0

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி. நடராஜனின் அறிக்கை:

அதிமுக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரால் போற்றி வளர்க்கப்பட்டு

பல்வேறு வரலாற்று சிறப்புகளைப் படைத்திட்ட “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” வருகின்ற 17.10.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று பொன்விழா காண இருக்கும் நிலையில் கழகத்தின் பொன்விழாவை சிறப்பாக கொண்டாடுவது என முன்னாள் தமிழக முதல்வரும் கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எதிர்கட்சி தலைவர் எடப்பாடி K.பழனிச்சாமி, முன்னாள் தமிழக துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர், எதிர்கட்சி துணை தலைவர் O.பன்னீர்செல்வம் அகியோரின் ஆணைக்கிணங்க,

திருச்சி மண்டல பொறுப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான .R.வைத்திலிங்கத்தின் வழிகாட்டுதளின்படி திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழகம் சார்பாக திருச்சி கோர்ட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். அவர்களின் திருஉருவ சிலைக்கு 17.10.2021 அன்று காலை 10.00 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

அதுசமயம் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட கழக பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள். தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி, கலை பிரிவு. முன்னாள்கோட்டத் தலைவர்கள், முன்னாள உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள். தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

மேலும் அங்காங்கே உள்ள பகுதி கழகம், வட்ட கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருஉருவ சிலைக்கு அல்லது படங்களுக்கு மாலை அணிவித்தும், கொடி கம்பங்களுக்கு வர்ணம் பூசி. கழக கொடியினை ஏற்றி ஏழை எளியவர்களுக்கு நலதிட்ட உதவிகள் செய்தும்,

அரசு அறிவித்திருக்கும் வழிநெறிமுறைகளை கடைபிடித்தும், சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்தும் இன்னும் சில தற்காப்பு நடைவடிக்கைகளை பின்பற்றியும் சிறப்பாக கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

என முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.