Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டி.20 உலகக்கோப்பை போட்டி பயிற்சி ஆட்டங்களில் இந்தியா அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியவுடன் விளையாட உள்ளது.

0

20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற 17-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன் பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன .

இந்த பயிற்சி ஆட்டத்துக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ சி சி ) வெளியிட்டுள்ளது .

ஒவ்வொரு அணியும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது .

அதன்படி இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதுகிறது .இந்த ஆட்டம் வருகிற அக்டோபர் 18 ம் தேதி துபாயில் நடக்கிறது.

தனது இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது .

இந்த ஆட்டம் வருகிற அக்டோபர் 20 ம் தேதி துபாயில் நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.