முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள்சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சி.விஜயபாஸ்கர் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி என 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.