Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் 17வது பட்டமளிப்பு விழா 25ம் தேதி நடைபெறயுள்ளது.

0

'- Advertisement -

தேசிய தொழில்நுட்பக் கழகம், (என்.ஐ.டி திருச்சி),

Ad banner

அதன் 17 ஆவது பட்டமளிப்பு விழாவை, செப்டம்பர் 25, 2021 அன்று மாலை 3 மணியளவில் கழக வளாகத்தில் உள்ள பார்ன் ஹாலில் நடத்தவுள்ளது.

இவ்விழாவில் பிராந்திய பொறியியல் கல்லூரி (ஆர்.ஈ.சி) தற்போதைய என்.ஐ.டி திருச்சியின் 54 ஆவது தொகுதி மாணவர்கள் பட்டம் பெறவுள்ளனர்.

 

TVK ad

ஸ்டீல் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை டாடா இயக்குநர் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சீ.ஐ.ஐ) தலைவர் டி. வி. நரேந்திரன் அவர்கள்,இப்பெரும் நிகழ்வின் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, பட்டமளிப்பு உரையையும் வழங்கவுள்ளார்.

என்.ஐ.டி திருச்சி நிர்வாக குழுத் தலைவர் பாஸ்கர் பட் அவர்கள், இப்பட்டமளிப்பு விழாவை நடத்துவார். என்.ஐ.டி திருச்சி இயக்குநர் முனைவர் மினி ஷாஜி தாமஸ் அவர்கள் அறிக்கை அளித்து, பட்டங்களை வழங்குவார்.

என்.ஐ.டி இதுவரை இல்லாத உச்சமாக 1793 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளது. இதில் 10 பிரிவுகளில் இருந்து 875 இளங்கலை பட்டதாரிகளும் ,29 பிரிவுகளில் இருந்து 744 முதுகலை பட்டதாரிகளும்,174 முனைவர் பட்டதாரிகளும் அடங்கியுள்ளனர்.

கோவிட் நெறிமுறைகளை கருத்தில் கொண்டு இந்நிகழ்வு நேரடி மற்றும் மெய்நிகர் என இருவழிகளிலும் நடத்தப்பட்டு, இணையவழியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.