Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிஐடியூ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

12( 3 ) ஒப்பந்தத்தின்படி 2012 ஆம் ஆண்டு பருவகால பணியாளர்களை உடனே பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

தொழிலாளர் ஆணையரின் (சமரசம்) உத்தரவின்படி இண்டேன் எரிவாயு பிரிவு ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்,

கிடங்குகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள், கணினிப் பிரிவு ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

கிடங்குகளில் பணிசெய்யும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு எப்சிஐ-க்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

Suresh

தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி இ.எல் சரண்டர் ஊதியம், எல்டிசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை
வலியுறுத்தி திருச்சி மண்டல
சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில்

திருச்சி மண்டல மேலாளர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட வாயிற் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மண்டல தலைவர் வேலு தலைமை தாங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை பேசுகையில் :

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் பருவகால ஊழியர்கள், கணினி பணியாளர்கள், இண்டேன் எரிவாயு பிரிவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஒன்றிய அரசு 3 வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகள், விவசாய தொழிலாளர்களை துன்புறுத்துகிறது. இந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது போல், தொழிலாளர்களுக்கு எதிரான 44 சட்டங்களை ஒருங்கிணைத்து 4 சட்டங்களாக ஒன்றிய அரசு கொண்டு வருவதை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். கூட்டத்தில்
சங்க மாநில பொதுச்செயலாளர் புவனேஸ்வரன், சிஐடியூ மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மண்டல செயலாளர் ராசப்பன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சந்திரன்
ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இதில்
நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல பொருளாளர் கருணாகரன் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.