திருச்சி கொட்டப்பட்டு அருகே 4 வருட காதலை மறந்த இளம்பெண். புதிய காதலனுக்கு கத்தி குத்து. முன்னாள் காதலன் கைது.
திருச்சி கொட்டப்பட்டு அருகே நான்கு வருட காதலை மறந்து புதிய காதல்

கே.கே.நகரில் வாலிபருக்கு கத்தி குத்து. முன்னாள் காதலன் கைது.
திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 21) என்ற வாலிபருடன் கடந்த 13 ம் தேதி கொட்டப்பட்டு பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மற்றொரு வாலிபர் திடீரென்று அந்த இளம் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த அந்தப் பெண்ணின் புதிய காதலன் மணிகண்டன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மணிகண்டனை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார்.இந்த சம்பவத்தில் காயமடைந்த மணிகண்டன் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து கே-கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை சக்தியால் குத்திய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் பெயர் சூர்யா (வயது 23) ஜெயில் கார்னர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சூர்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆறு மாத காலமாக இளம் பெண் சூர்யாவை புறக்கணித்து இருவரும் சந்திக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 13 ந்தேதி இளம் பெண்ணை புதிய காதலன் மணிகண்டனுடன் பார்த்த பொழுது சூர்யா ஆத்திரமடைந்து அந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு அவருடைய புதிய காதலன் மணிகண்டனை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என தெரிய வந்தது. இதையத்து கே.கே.நகர் காவல் நிலைய போலீசார் சூர்யாவை கைது செய்துள்ளனர்.

