திருச்சி உறையூரில்
திருமணத்திற்கு சென்ற மூதாட்டி மாயமானார்.
கூடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கீரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள், இவரது மனைவி செல்லம்மாள் (வயது 60) இவர்கள் இருவரும் திருச்சி உறையூரில் உள்ள மகள் வீட்டிற்கு வந்தனர். அங்கே பேத்தியின் திருமண விழாவில் கலந்துகொண்டனர். பின்னர் தனது மனைவி செல்லம்மாள் அழைத்துக்கொண்டு பெருமாள் ஊருக்கு செல்ல முயன்றார். அப்போது வெளியே சென்ற செல்லம்மாளை காணவில்லை.
உடனே இது குறித்து பெருமாள் உறையூர் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்கு பதிந்து மாயமான செல்லம்மாளை தேடி வருகிறார்.
2.
11 வகுப்பு மாணவி மாயம்.
திருச்சி உறையூர் காவகார தெருவைச் சேர்ந்தவர் மாதவன் இவரது மகள் பிரியதர்ஷினி ( வயது 16) . இவர் திருச்சியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டிற்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை இதுகுறித்து அவரது தந்தை மாதவன் உறையூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
3.
திருச்சி தென்னூரில்
அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சென்றவர் சாவு.
திருச்சி தென்னூர் அண்ணா நகர் 1வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 50) .
இவர் கடந்த 15 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளைத் தின்றார் .இதனால் அவருக்கு வாந்தி ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி மேகலா கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்