திருச்சி கோட்டை பகுதியில்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெட்டி பெட்டியாக பறிமுதல்.
2 பேர் கைது.
திருச்சி கோட்டை, காந்தி மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன்,சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட நடு குஜிலித் தெரு பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு இரண்டு கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் எடை சுமார் 8.5 கிலோ ஆகும் .இதன் மதிப்பு ரூ 10,000 ஆகும். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 வியாபாரிகளை கைது செய்தனர் .
மேலும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.