4 வது உலக காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷப் போட்டி போலந்து நாட்டியில் லுப்ளின் என்ற இடத்தில் ஆகஸ்ட்
23 – 28 /2021 நடக்க இருக்கும் தடகள போட்டியிற்கு ,
அனைத்து இந்திய காதுகோளதோர் தடகள கவுன்சில் சார்பில் புது டெல்லி ஐவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஜூலை 22ம் தேதி நடந்த தடகள போட்டியில்
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தடகள வீரர் கே.மணிகண்டன் 100 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதல் (long Jump) பிரிவிற்கு இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரை திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜூ , மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி.நீலமேகம் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்ளுவதுடன் ,
அடுத்த வாரம் இந்திய அணி சார்பாக கலந்துக் கொள்ளவுள்ள
திருச்சியிற்கு பெருமை சேர்க்கும் வகையில் துறையூர் கே.மணிகண்டனுக்கு திருச்சி மாவட்ட தடகள சங்க சார்பாக வாழ்த்தி வழி
அனுப்புதல் மற்றும் பாராட்டு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.