வாக்குறுதிகளை நிறைவேற்ற விட்டால் போராட்டம். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றாவிட்டால்
திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம்.திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் இன்று திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது கூட்டத்தில் கட்சியின் அமைப்பு தேர்தல், பொன்விழாக் கொண்டாட்டம், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில அளவில் திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சி அமைத்து 70 நாட்கள் ஆகியும் நிறைவேற்றவில்லை திருச்சி மாவட்ட அளவில் 35 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளது.
அந்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் திமுக அரசை கண்டித்து தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் போராட்டங்கள் நடத்துவது
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் .காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை கைவிட மாநில அரசு முனைந்து செயல்பட வேண்டும்.
விவசாயத்திற்கு தனிநிதிநிலை அறிக்கை என்று கூறும் திமுக அரசு விவசாயிகளின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். திருச்சிபுறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தலில் அனைத்து அமைப்புகளுக்கும் நிர்வாகிகளை ஒற்றுமையுடன் அமைதியான முறையில் தேர்வு செய்வது, அதிமுக 50வது ஆண்டு பொன்விழாவை திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடுவது, நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தெற்கு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றிக்கு வழிவகை செய்யும் வகையில் பூத் கமிட்டிகள் ,தேர்தல் பணி குழு அமைத்து சிறப்பாக பணியாற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அவைத்தலைவர் பர்வீன் கனி. முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திரசேகர் ,பாலன், சின்னசாமி நிர்வாகிகள் ரீனா செந்தில், சாந்தி, ராஜ்மோகன், நெட்ஸ் இளங்கோ. டி. டி. கிருஷ்ணன். சண்முக பிரபாகரன், செல்வம், அழகர்சாமி.கார்த்திக். டோமினிக் அமல்ராஜ், அருண் நேரு, சுரேஷ்குமார் ‘ராஜா மணிகண்டன், ராஜா வெங்கடாசலம், ராவணன், கும்பக்குடி கோவிந்தராஜ், அசோகன், சிவக்குமார், பகுதி செயலாளர்கள்
பாலசுப்பிரமணியன், பாஸ்கர். தண்டபாணி மற்றும் எஸ்பி பாண்டியன், பவுன் ராமமூர்த்தி உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்