திருச்சி கிழக்கு தொகுதியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் திமுகவின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருடைய பிறந்தநாள் இன்று.
இதனை முன்னிட்டு திருச்சியில் அனைத்து பகுதிகளிலும் திமுக சார்பில் வெற்றி பெற்ற இனிகோ இருதயராஜ் தங்களது கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் மற்றும் சில நிர்வாகிகளிடம் கூறி வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்ட செய்துள்ளார்.
மேலும் சில பத்திரிகைகளுக்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் மற்றும் சில நிர்வாகிகள் மூலம் விளம்பரம் அளித்துள்ளார்.
இவர் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் அவர்களது நிர்வாகிகள் படம் மட்டும் போட்டு போஸ்டர்,பத்திரிகை விளம்பரம் அளித்து இருந்தால் திமுக நிர்வாகிகள் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்திருப்பார்கள்.
ஆனால் இந்த விளம்பரங்களில் தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கே.என்.நேரு,மகேஷ் பொய்யாமொழி ஆகியோரது படங்கள் சிறிதாகவும் இனிகோ இருதயராஜ் படம், பெயர் திமுக பார்டரில் அனைவருக்கும் தெரியும்படி பெரியதாகவும் போடப்பட்டுள்ளது.
சில விளம்பரங்களில் கே.என்.நேரு படம் தவிர்க்கப்பட்டுள்ளது.
திருச்சியில் தனித்துவமாக தான் தெரிய வேண்டும் என்பதற்காக அமைச்சர்கள் யாரும் இல்லாமல் நிவாரண பொருட்கள் வழங்குவது, ஆய்வுகள் மேற்கொள்வது என தன்னை பிரபலப்படுத்தி வருகிறார் என ஏற்கனவே திமுகவினர் பேசி வரும் நிலையில்
தற்போது இவர் வெளியிட்ட விளம்பரங்களில் முதல்வர், கழக முதன்மைச் செயலாளர் ஆகியோர் படங்களெல்லாம் சிறிதாகவும், தனது படங்களை பெரியதாக போட்டு தன்னை பிரபல படுத்துவதை ஊரறிய செய்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கே.என்.நேரு தயவால் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அவர்களை மறந்து( தவிர்த்து) இருப்பது உண்மையான திமுக விசுவாசிகளிடம் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.