இறந்தும் உயிர் வாழவைத்த குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கம் நன்றியுடன் , பாராட்டு.
ஜுலை 4ம் தேதி காந்தி மார்க்கெட் வியாபாரி செல்வராஜ் சமயபுரம் அருகில் விபத்தில் முளை சாவு அடைந்ததும் அவரது மனைவி சுப்த்ரா மற்றும்
குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்து கல்லீரல் , கிட்னி போன்ற உறுப்புகளை தானம் செய்தார்கள்.
சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டாக, அரும் பெரும் செயலாற்றி, சமூக பார்வைக்கும், மன ஆற்றலுக்கும் செய்யலை செய்த சுபத்ரா செல்வராஜ் குடும்பத்திரை நேரில் சென்று செல்வராஜ் மறைவுக்கு ஆழந்த இரங்கல்களை தெரிவித்து, இறந்தும் அவர் உயிர் வாமும் விதமாக அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கியதற்கு திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பாக தலை வணங்கி , நன்றியுடன் பாராட்டுகளை தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் , மாநில துணை பொதுச் செயலாளர் வெ.ரா சந்திரசேகர், என்.வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள்.