10வது பட்டமளிப்பு விழா
கேர் கல்விக்குழுமத்தின் 10வது பட்டமளிப்பு விழா ஆன்லைன் மூலம் நடைபெற்றது.
கேர் கல்விக்குழுமத்தின் சி.இ.ஒ
பா.ப்ரதிவ் சந்த் தொடங்கிவைத்தார்.
அதைத்தொடர்ந்து கேர் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.சாந்தி, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் இதயம் குழுமத்தின் சேர்மன் வி.ஆர். முத்து அவர்களை வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் பேசும்போது தொழில் முனைவோர் ஆவதற்கான சில யுக்திகளை அவர் மாணவர்களுடன் அவர் பகிர்ந்துகொண்டார் .
மேலும் தொடர் முயற்சியின் மூலமே வெற்றி கிட்டும் என்பதை உணர்த்தி சில எடுத்துக்காட்டுகளை பகிர்ந்துகொண்டார்.
எங்கு ஒழுக்கம் இருக்கிறதோ அங்கு குழந்தைகள் நல்வழிப்படுவார்கள் என்று கூறி வெற்றியின் ரகசியத்தை பட்டதாரிகளுடன் பகிர்ந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை கேர் கல்வி குழுமித்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.