Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பெற்றோர்கள், மருத்துவர்கள் ஆலோசனைக்கு பின் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

0

'- Advertisement -

Ad banner

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி .

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் வெளியே வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகளால் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கொரோனா 3-வது அலை பரவும் என எதிர்பார்க்கக்கூடிய நிலையில், டாக்டர்கள், பெற்றோர்களின் ஆலோசனைகளை பெற்று பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். பெற்றோர்கள் தைரியத்துடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வர வேண்டும். மேலும் சட்டமன்ற கூட்டத்தில் முதல்-அமைச்சரின் முடிவுகளின் படியே நீட் தேர்வு குறித்த நடவடிக்கை இருக்கும்.

தமிழகத்தில் கோர்ட்டு உத்தரவின்படி தனியார் பள்ளிகளில் தவணை முறையில் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 40 சதவீத கட்டணம் முதல் தவணையாகவும், 35 சதவீத கட்டணம் 2-வது தவணையாகவும் செலுத்துவதற்கான உத்தரவை நடைமுறைப்படுத்த தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.