இரங்கல் கூட்டத்திற்கே தாமதமாக வரும் எம்எல்ஏ எப்படி மக்கள் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைப்பார். கிறிஸ்தவ பங்கு மக்கள் புலம்பல்
இரங்கல் கூட்டத்திற்க்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்.
மறைந்த அருட்தந்தை ஸ்டென் சுவாமி அவர்களின் இரங்கல் கூட்டம் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பாக திருச்சி மேலப்புதூர் நல்லாயன் நிலையத்தில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் மாநிலத் தலைவரும், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் தலைமையில் நேற்று மாலை 5 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிறப்பு அழைப்பாளர்களாக
புனித லூர்து அன்னை ஆலயம் Rev.Fr.மரிவளன், TELC பேராலய சபை குரு Rev.Fr. சுந்தரம் ஏசு ராஜ், ஆசிர்வாத மூத்த போதகர் ஐக்கியம் Bishop.சவரிராஜ், பாதிரியார்கள், தமுமுக மாவட்ட தலைவர் முகமது ராஜா, செயலாளர் பைஸ் அகமது மற்றும் பங்கு மக்கள் என அனைவரும் இந்த இரங்கல் கூட்டத்திற்கு 5 மணிக்கே வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்து 2 மணி நேரமாக திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜிக்காக காத்திருந்தனர்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு வந்த திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்று அருட்தந்தை ஸ்டென் சுவாமியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இக்கூட்டத்தை மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜான் பிரகாஷ், திருச்சி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் ஜேக்கப், மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் , செய்தி தொடர்பாளர் தன்ராஜ், கிழக்கு தொகுதி செயலர் கனகராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இரண்டு மணி நேரம் காத்திருந்த பங்கு பொதுமக்கள் செல்லும்போது இரங்கல் கூட்டத்திற்கே இரண்டு மணி நேரம் தாமதமாக வரும் சட்டமன்ற உறுப்பினர் எப்படி மக்களின் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைப்பார் என்று புலம்பியவாறு சென்றனர்.