திருச்சியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து விஜயபிரபாகரன் தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம். விஜயபிரபாகரன் பங்கேற்பு :
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகாமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, கொரோனா வைரஸ் காலகட்டத்தில் டாஸ்மாக்,மதுபான கடைகள் முடிவும், கட்டுமான பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் கணேஷ், கிருஷ்ணகோபால்,குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாணவரணி விஜயகுமார், மாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவரும் தெற்கு மாவட்ட அவைத் தலைவருமான பாரதிதாசன், கலைப்புலி பாண்டியன், பகுதி செயலாளர் ராமு இளைஞர் அணி உரையூர் சாதிக் மற்றும் திரளான கட்சியினர் பங்கேற்றனர்.
இதில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.