Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் கொரோனா 3வது அலை: விஞ்ஞானிகள் குழு அறிவிப்பு.

0

'- Advertisement -

கொரோனா பாதிப்புகள் பற்றி முன்கூட்டியே கணிப்பதற்காக 3 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்த குழு கொரோனா 3வது அலை பாதிப்பு குறித்து தற்போது கணித்துள்ளது. அதில்,
நோய் எதிர்ப்பு திறன் மற்றும் தடுப்பூசியின் செயல் திறன் இழப்பு, புதிய உருமாறிய கொரோனா வகைகள் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. 2வது அலை தாக்க முன்கணிப்பின்போது இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

Suresh

தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தும்போது, கொரோனாவின் மூன்றாம் அல்லது நான்காம் அலையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. 3வது அலை பாதிப்பின்போது பெரும்பாலும் தினசரி பாதிப்பு அளவு 50,000 முதல் 1 லட்சம் என்ற அளவிலேயே இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

3வது அலை பாதிப்பு அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடைய வாய்ப்புள்ளது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனில், மூன்றாம் அலையின்போது தினசரி பாதிப்பு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் அளவுக்கு உயர வாய்ப்புள்ளது.

இது 2வது அலை உச்சத்தில் இருந்த மே மாதத்தின்போது பதிவான தினசரி பாதிப்பு அளவில் பாதிக்கும் குறைவாகும்.

மே 7ந்தேதியன்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 4,14,188 ஆக பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.